தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளதால், பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படை வீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்குஉடல் திடகாத்திரம் உள்ள மற்றும் விருப்பம் உள்ள 65 வயதுக்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது முன்னாள் படைவீரர் அடையாள அட்டை மற்றும் படை விலகல் சான்றுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி விருப்ப விண்ணப்பம் சமாப்பிக்கலாம். இப்பணிக்கு அரசு விதிமுறைகளின் படியான ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.