தூத்துக்குடி மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகின்றன


தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது;  வேட்பாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ முகவர்கள் போலீசார் சோதனை செய்த பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதி

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு   319 வாக்குச்சாவடிகள் அமைக்ப்பட்டு  கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை தூத்துக்குடி வ உசி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சீல் வைத்து வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது இதற்காக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை  போலீசார் சோதனை செய்த பிறகு  வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை காக முதல் தளத்தில் 15 டேபிள்கள் அமைக்கப்பட்டு 1வது முதல் 30வது வார்டு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதேபோல் இரண்டாவது தளத்தில் 15 டேபிள்கள் அமைக்கப்பட்டு 31 முதல் 60 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு டேபிளுக்கு தனித்தனியாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது.

முதலில் சரியாக 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு உள்ளது

இதைத்தொடர்ந்து வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வார்டு வாரியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

Previous Post Next Post