நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுனர்.! - தமிழகம் அதிர்ச்சி.!

 


நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த மசோதாவை தமிழக ஆளுநர் ரவி  திருப்பி அனுப்பினார்.!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்.,13ல் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் தி.மு.க., எம்.பி.,க்கள் மனு அளித்திருந்தனர். தமிழக கட்சி குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: நீட் தேர்வில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவையும், தமிழக அரசு அமைத்த குழுவின் அறிக்கையையும் கவர்னர் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த மசோதாவானது, மாநிலத்தில் வசிக்கும், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனால், இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டி, தமிழக சட்டசபை சபாநாயகருக்கு, நீட் தேர்வு விலக்கு மசோதாவை கவர்னர் அனுப்பி வைத்துவிட்டார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வு குறித்து நன்கு ஆராய்ந்ததுடன், ஏழை மாணவர்களின் பொருளாதாரத்தை சுரண்டலை தடுக்கவும், சமூக நீதியை மேம்படுத்தவும், நீட் தேர்வு உதவுகிறது என்பதை உறுதி செய்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் அரசு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை எசேத்சாதிகாரமாக கவர்னர் திருப்பி அனுப்பியிருப்பது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post