வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட சேத்துவண்டை ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சேத்துவண்டை ஊராட்சிக்குட்பட்ட சென்றாம்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ருபாய் 1.78 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பண்ணை குட்டை அமைக்கும் பணியினை பார்வையிட்டார். அப்போது பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுகிறதா உள்ளிட்டவை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து 1.35 லட்சம் மதிப்பீட்டில் அமைத்த கால்நடை கொட்டகையினையும்,
அதே பகுதியை சேர்ந்த விஜயலக்ஷ்மி என்பவருக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ருபாய் 1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அவரது வீட்டின் கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ருபாய் 2.27 லட்சம் மதிப்பீட்டில் சுந்தரி என்பவரின் 20 ஆடுகளுக்கு உண்டான ஆட்டுக்கொட்டகையினையும் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து துர்கைநகரில் ருபாய் 6 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிட்டின் கீழ் போடப்பட்டு வரும் சிமெண்ட் சாலையில் முறையாக போடப்படுள்ளதா என்றும் பார்வையிட்டார். அப்போது சுமார் 15 வருடம் பராமரிப்பின்றி கிடந்த நூலகத்தையும் அதனை பராமரிக்க பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.
15 வருடமாக பராமரிப்பின்றி கிடந்த நூலகத்தை நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் மூடியே கிடக்கும் நூலகத்தை பார்வையிட்டார். அப்போது ஏன் இவ்வளவு வருடமாக பராமரிப்பின்றி மூடியே கிடக்கிறது என்றும் உடனடியாக அதனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் அங்கு காலி மதுப்பாட்டில் களை பார்த்து அங்குள்ள அதிகாரிகளுக்கு இதனை அப்புறப்படுத்து வேண்டும் என்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நூலகத்தை பயன்பாட்டிறக்கு கொண்டுவர ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் அமைத்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சத்யா நகரில் சத்யவேனி என்பவருக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ருபாய் 1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் அவரது வீட்டின் கட்டுமான பணிகளையும், ருபாய் 2.27 லட்சம் மதிப்பீட்டில் 20 ஆடுகளை கொண்ட அமைத்த ஆட்டுக்கொட்டகையினையும் பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது குடிநீர் பிரச்சினை, முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் ஊக்க தொகை, உள்ளிட்டவை வராமல் இருக்கும் நபர்களுக்கு உடனடியாக வழங்க ஆவணம் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் சப் கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார்கள் சரண்யா, லலிதா, ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், பிடிஓக்கள் கோபி, கலைச்செல்வி,
ஒன்றிய கவுன்சிலர் சீதாராமன், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாத் விஏஓ சரஸ்வதி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சரவணன், ஊராட்சி செயலாளர் ஜஸ்டின், உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறையினர், வருவாய் துறையினர், உடனிருந்தனர்.