நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக வினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
வரலாறு காணாத வன்முறைகளை நிகழ்திய திமுகவினர் நடவடிக்கைகளை தட்டிக்கேட்ட அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்ட திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில்
முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் ஒழிப்போம் திமுக அரசை விரட்டுவோம். அஞ்சமாட்டோம் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,
மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினாபாக்கியராஜ், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் ராஜசேகர், வக்கீல் அணிசெயலாளர் சேகர்,
எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், ஜோஷுவா அன்புபாலன்
தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், தொழிற்சங்க செயலாளர் ராஜா, ஓன்றிய செயலாளர்கள் ராஜ்நாராயணன், அழகேசன், காசிராஜன்,
பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், துணைச்செயலாளர் டைகர்சிவா, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன், வர்த்தக அணி செயலாளர் பட்டுராஜா, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் கௌதம் பாண்டியன்,
வக்கீல்கள் முனியசாமி, செங்குட்டுவன், சரவணபெருமாள், வட்டச்செயலாளர்கள் முருகன், மற்றும் அசோகன், உலகநாதபெருமாள், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.