டெல்லி விவேக் விகாரைச் சேர்ந்த பெண்ணை குடியரசு தினத்தன்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அப்பெண்ணை மொட்டையடித்து, முகம் கறுக்கப்பட்டு, கழுத்தில் செருப்பு மாலையுடன் தெருக்களில் ஊர்வலமாகவும் அழைத்துச் சென்ற கொடூரம் இந்திய அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 8 பெண்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு சிறார்களையும் ஷாதாரா போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த இளம் பெண்ணின் பின்னால், பக்கத்து ஏரியாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் கடந்த சில நாட்களாக பின் தொடர்ந்து சென்றதாகவும் இப்படியான நிலையில் தான், அந்த இளைஞர் திடீரென உயிரிழந்து உள்ளார். இதனால், அந்த இளைஞரது உயிரிழப்பிற்கும் இந்த இளம் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய அந்த இளைஞரின் குடும்பத்தினர், ஆண் - பெண் என மொத்தம் 11 பேர் சேர்ந்து, இந்த திருமணம் ஆன இளம் பெண்ணை கடத்திச் சென்று, தங்கள் வீட்டு குடும்ப பெண்கள் முன்னிலையிலேயே அந்த இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
https://twitter.com/IamAjaySehrawat/status/1487102869513723905?t=C-DRb2Kq1G12oOrwwwdAwg&s=19
இதுகுறித்து தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் அவர் டிவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் விடியோவை வெளியிட்டு இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்'எனத் தெரிவித்தார்.
நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி '20' வயது பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ நமது சமூகத்தின் மிகவும் குழப்பமான முகத்தை அம்பலப்படுத்துகிறது. கசப்பான உண்மை என்னவென்றால், பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை. இந்த வெட்கக்கேடான உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்' என டிவிட்டரில் பதிவிட்டார்.
மேலும், இச்சம்பவம் சமூகத்தின் கோரமான முகத்தைக் காட்டுவதாக பலரும் கருத்துத் தெரிவித்து வரும்நிலையில், மனதை உறைய வைக்கும் அளவிற்கு பாதிக்கப்பட்ட பெண்ணை சில சிறுவர்களும் பெண்களும் கொடூரமாகத் தாக்கும் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.