தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் வாக்களித்தனர்.!


நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு பதிவு துவங்கியது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 750 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது. பதற்றத்தை தடுக்க 2620 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து பகுதிக்குட்பட்ட வாக்களர்களிடம் வாக்கு சேகரித்தனர். 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தங்களது வாக்கினை அளித்தனர்.

Previous Post Next Post