தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் தனது குடும்பத்தினருடன் வாக்கு அளித்தார்.


நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு பதிவு துவங்கியது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 750 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது. பதற்றத்தை தடுக்க 2620 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து பகுதிக்குட்பட்ட வாக்களர்களிடம் வாக்கு சேகரித்தனர். 


தூத்துக்குடி மாநகராட்சி 20வது வார்டுக்குட்பட்ட கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சிறுபான்மை பிரிவு நல அணி துணை செயலாளர் ஜீவன்ஜேக்கப், உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் வாக்களித்தனர்.

திமுக மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிதிநி பிரபாகர், வட்டச்செயலாளர் நாராயணன், உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

Previous Post Next Post