இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அமைப்புகளுக்கான 22.02.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள், கடையுடன் இணைந்த பார்கள் மற்றும் FL2, FL3 உரிம தலங்களில் அமைந்துள்ள பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினங்களில் மது விற்பனை செய்வதோ, பார்கள் திறப்பதோ, இப்பகுதிகளில் மதுபாட்டில்களை எடுத்துசெல்வதோ தடை செய்து ஆணையிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.