தேனி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

 தேனி மாவட்ட செய்தியாளர் ரா.சிவபாலன்...


தேனி, பிப்ரவரி- 21

தேனி மாவட்டத்தில்  6 நகராட்சி 22 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 733 வாக்குச்சாவடியில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

 வாக்கு இயந்திரங்களை அதற்காக ஒதுக்கப்பட்ட 11 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு செய்து கண்காணித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேனி மாவட்ட கலெக்டர் தேர்தல் அலுவலர் முரளீதரன், மற்றும் தேர்தல் பார்வையாளர் சங்கர், தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், திட்ட இயக்குனர் தண்டபாணி, முன்னிலையில் பத்திரிக்கையாளர் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும், தேர்தல் அலுவலர்கள் முகவர்கள், வேட்பாளர்கள், செய்தியாளர்கள், உள்ளிட்டோர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Previous Post Next Post