ராமேஸ்வரம் திருக்கோயிலில் மகாசிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது.!


ராமேஸ்வரம் பிப் 21,

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோயிலில் மஹாசிவராத்திரி திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.

ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடித்திருக்கல்யாணம், மாசிசிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மஹாசிவராத்திரி நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று காலை சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கல் வேத மந்திரம் முழங்க மேஷலக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.


 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியல் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்காண பக்தர்கள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு உள்ளதால்  பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படைவசதிகளை துரிதப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

விழாவை  தொடர்ந்து, வரும் மார்ச் மாதம் 1ந்தேதி இரவு  வெள்ளிரதத்தில் சாமி  வீதி உலா நிகழ்ச்சியும் தேரோட்டமும்  நடைபெறும். அதே போல் வரும் 02ந் தேதி அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்தக் கடலில் ஸ்ரீராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று அக்கினிதீர்தக் கடலில் முதாதையர்களுக்கு தர்பணம் கொடுத்து அக்கினிதீர்தக் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்  செய்வார்கள்.

Previous Post Next Post