சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில்
தமிழ்நாடு அரசின் சார்பில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்று பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவற்றில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி
இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் - விளாத்திக்குளம் விலக்கில் வருகை தந்த போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் மலர் தூவி வரவேற்றதோடு அவர்கள் தலைமையில் ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட மேளதாளங்களுடன் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு வரவேற்றார்கள்.
அதனைத்தொடர்ந்து மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் குறுக்குசாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் மலர் தூவி வரவேற்றதோடு அலங்கார ஊர்தியினை பார்வையிட்ட பொதுமக்களிடம் சுதந்திர போராட்ட வீரர்களை குறித்து விளக்கி கூறியதோடு இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும்படி கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. போக்குவரத்து பூங்கா முன்பு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி சிவப்பு கம்பளம் விரித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் வ.உ.சி. கல்லூரி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டார்கள். அதனைத்தொடர்ந்து புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 200க்கும் அதிகமான மாணவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் பார்வையிட்டு வாழ்க்கை கேட்டறிந்தார்கள். அடங்கிய வரலாறு அலங்கார ஊர்தியினை குறித்து ஆசிரியர்களிடம்
வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி பயணித்த சாலை நெடுகிலும் பொதுமக்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்ததோடு புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மாலை வ.உ.சி. பூங்கா அருகில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் அரசு இசை பள்ளி சார்பில் பரத நாட்டியம், கலை பண்பாட்டு துறை சார்பில் தப்பாட்டம். ஒயிலாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன்,கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், அரசு இசை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி ரவி, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை. காவல்துறை, எரிசக்தி துறை, போக்குவரத்து துறை மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.