திருப்பூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக பலியானார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து டுவச்சேரி கருக்ககாட்டுப்புதூரில் வசித்து வருபவர் கருப்புசாமி (வயது 51). இவரது மனைவி சாவித்திரி (46), மகன்கள் சாரோன் (27), கௌதம் (24) மற்றும் சுமேஷ்(21) ஆகியோருடன் அங்கு வசித்து வந்தார். குன்னத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு வழக்கமான பணி முடித்து குன்னத்தூர் காவல் நிலையத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் தொரவலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. பலத்த காயமடைந்தவருக்கு கடந்த இரண்டு நாட்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி கருப்புசாமி உயிரிழந்தார். இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்னர் குன்னத்தூர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.