பவானிசாகர் - பிப்.26
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த பவானி சாகர் அருகே புதுபீர்கடவு கிராமம் உள்ளது. இந்த கிராம த்திலிருந்து மேல்நிலைக் கல்வி பயில மாணவ, மாணவி யர் தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். வழக்கம் போல் காலை 8.30 மணி அளவில் புதுப்பீர் கடவு பிரிவு அருகே மாணவ, மாணவியர் பேருந்துக்காக காத்திருந்த போது,
அவ்வழியே வந்த பி.1நம்பியூர் கிளை அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்ல முடியாமல் சாலையில் காத்திருந்தனர். இதனை அறிந்த அப்பகுதி பொது மக்கள் பி-1 பேருந்து திரும்பி வரும்போது,
பஸ்சை வழி மறித்து மறியல் செய்தனர். தகவல்அறிந்து சம்பவ இடம் விரைந்தபவானிசாகர் காவல் ஆய்வாளர் பிரபாகரன்,சத்தி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா சோபியா மற்றும் பவானிசாகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. எல். சுந்தரம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் முடிவில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் தவறை ஒப்புக் கொண்டு,
இனிமேல் பள்ளி நேரத்தில் வாகனத்தை நிறுத்தி மாணவர்களை அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். மேலும் இவ்வழிதடத்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அல்வப்போது இந்த ஒட்டுநர்எங்களைக் கண்டால் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி விடுவதாக பெண்கள் குற்றம்சாட்டினர்.காவல் ஆய்வாளர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல். சுந்தரம்
பொதுமக்களை சமாதானப்படுத்தி இதுபோன்ற தவறு இனி நடக்கா வண்ணம் சம்பந்தப்பட்ட கிளை மேலாளரை அழைத்து பேசுவதாக தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.பொதுமக்களின் மறியல் காரணமாக பவானி சாகர் பண்ணாரி சாலை வழியாக சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டு, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.