சென்னை மாநகராட்சி தேர்தலில் 134-வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். உமா ஆனந்தன் 134-வது வார்டில் 5539 வாக்குகளை பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நின்ற அவர் சுமார் 2036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
BJP 5539
CONG 3503
ADMK 2695
தபால் வாக்குகள் முதலே பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் முன்னிலையில் இருந்தார். மேற்கு மாம்பலத்தில் பாஜகவிற்கு வலுவான வாக்கு வங்கியை பெற்றுள்ளது. அதேப்போன்று சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் பாஜக 2-ம் இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. முன்னதாக அவர் 8 ஓட்டு மட்டுமே பெற்றதாக செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
#Chennai | #BJP | #LocalBodyPolls