தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓங் டாம் சொரோட், தான் எப்படி எட்டு மனைவியரை திருமணம் செய்து அனைவருடனும் ஒரே வீட்டீல் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்பதை பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்தார், அந்நிகழ்ச்சி யூடியூப்பில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
நிகழ்ச்சியில் சோரோட் தனது ஒவ்வொரு மனைவியையும் அறிமுகப்படுத்தி அவர்கள் எப்படி அவரை சந்தித்தார்கள், காதல் எப்படி மலர்ந்தது என்பதை விளக்கினார்.
தனது முதல் மனைவியான நோங் ஸ்ப்ரைட்டை ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்தாராம், கண்டதும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்..
இரண்டாவது மனைவியான நோங் எல்..லை மார்க்கெட்டில் சந்தித்துள்ளார், உடனே பேரம் படிந்து திருமணம். அவரது மூன்றாவது மனைவியான நோங் நானை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது மனைவிகளை முறையே Instagram, Facebook மற்றும் TikTok வழியாக சந்தித்து திருமணம் செய்துள்ளார்.
அவரது ஏழாவது மனைவியான நோங் பிலிம், ஃபிரா பாத்தோம் ஐ கோவிலுக்குச் சென்றபோது சந்தித்து காதல் மலர்ந்ததாம்., ஸ்..ஸப்பா
சரிங்க அப்போ எட்டாவது ?
பட்டாயாவில் தனது நான்கு மனைவிகளுடன் விடுமுறையில் இருந்தபோது தனது எட்டாவது மனைவியான நோங் மாயை சந்தித்தாராம் அங்கேயே திருமணம் செய்து கொண்டாராம்...
இதுல பியூட்டி என்னன்னா... "நான் இருக்கும் போது இன்னொரு கல்யாணமா"...ன்னு எந்த மனைவியும் சண்டைக்கும் வரலை, கோபப்பட்டு அவங்க அம்மா வீட்டுக்கும் போகல... எப்படி இப்படி...ன்னு நம்ம யோசிக்கிறதுக்குள்ள..நாங்க பார்த்ததுலேயே ரொம்ப அக்கறையுள்ள, அறிவான, அழகான மனுஷன் இவரு தான்... ன்னு எட்டு மனைவிகளும் சர்டிபிகேட் வேற குடுக்குறாங்க.... கொடுமைய எங்க போய் சொல்ல...
தற்போது சோரோட்டின் இரண்டு மனைவிகள் கர்ப்பமாக உள்ளனர். அவருக்கு ஏற்கனவே அவரது முதல் மனைவியான நோங் ஸ்ப்ரைட் உடன் ஒரு மகன் உள்ளார்.
மனைவிகள் நான்கு படுக்கையறைகளில் தூங்குகிறார்கள், ஒரு அறைக்கு இரண்டு பேர், தங்கள் கணவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு (சார்ட்) அட்டவணையை வைத்துள்ளனர்.
சரிங்க நீங்க ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் மற்ற பெண்கள் எப்படி உங்களை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்கள்.. என்று கேட்டால், அவர்களில் பெரும்பாலோர் அவரை வெறித்தனமாக காதலிப்பதாகவும் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டதாகவும் கூறுகிறார்..
தன்னுடன் இருக்கும் வரை எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தனது மனைவிகளிடம் கூறியுள்ளதாகவும், வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ள விரும்பினாள் என்னிடம் நேரடியாக சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளதாகவும் சோரோட் நிகழ்ச்சியில் கூறினார்
அவர்கள் பிரிந்து செல்ல விரும்புகிறார்கள் என்று உறுதியாக தெரிந்தால் அவர்களிடம் மூன்று முறை கேட்பேன், அவர்கள் ஆம் என்று சொன்னால், அவர்களை விடுவித்து விடுவேன் அவர் கூறினார். ஆனால் அப்படி எதுவும் இன்னும் நடக்கவில்லை.
இத்தனை மனைவிகளை மெயின்டெயின் செய்ய அவரிடம் அதிகமான பணம் இருக்கும் என நீங்கள் நினைத்திருந்தால் , அதை டஸ்டர் வைத்து அழித்து விடுங்கள்,
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேலை பார்த்து சம்பாரிப்பதாக அவர் கூறுகிறார். எல்லோருக்கும் வேலை பார்க்கும் கடமை இருப்பதாகவும், தனது மனைவிகள் வேலைகளைச் செய்வதன் மூலமோ அல்லது பல்வேறு வகையான தயாரிப்புகள் மற்றும் கையால் செய்யப்பட்ட பாகங்கள் விற்பனை செய்வதன் மூலமோ தாங்கள் வருவாய் ஈட்டுவதாக கூறுகிறார்., ஏய் இது ரொம்ப நல்லா இருக்குய்யா... என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் கூவுமே ?
சோரோட்டின் இந்த அசாதாரண வாழ்க்கை முறை சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது, சிலர் அவரை ஆஹா, ஒஹோ என போற்றவும் செய்கின்றனர். சிலர் அவரை கேலி செய்கின்றனர், நம்மைப் போன்ற அப்பாவி ஆண்கள் மட்டும் 'எட்டு மனைவிகளை எப்படிய்யா சமாளிக்கிற' என்று அவர் மீது பரிதாபப்படுகின்றனர். பின்ன இருக்காதா? ஒன்று கட்டியதற்க்கே தலையில் முக்கால்வாசி முடியை இழந்து விட்டோம்,..ன்னு தானே முனுமுனுக்கின்றீர்கள்