திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. மொத்தம் 60 வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 55-வது வார்டு வேட்பாளராக 22 வயதே ஆன சட்டக் கல்லூரி மாணவி அ.தீபிகா (வயது 22), அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து திமுக கூட்டணி வேட்பாளர் அ.தீபிகா, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பெரிச்சிபாளையம் திமுக அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தம்பி.குமாரசாமி, வட்டக்கழக செயலாளர் ஆதவன் முருகேஷ் உள்ளிட்ட தி.மு.க.நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.