வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கநேரி கிராமத்தில் 53-ம் ஆண்டு மாடு விடும் திருவிழா நடைபெற்றது. முதல் பரிசு ரூ. 77,777, இரண்டாம் பரிசு ரூ.55,555, மூன்றாம் பரிசு ரூ.44,444 உள்பட 58 பரிசுகள் 5 சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 105 மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வாலிப ரசிகர்கள், மாடுகள் ஓடும் போது பாதையின் குறுக்கே நின்றபடி அவற்றை உற்சாகப்படுத்தினர்.
முதல் பரிசுத் தொகையை போடிரெட்டியார் பைபாஸ் மாடு பெற்றது. இரண்டாவது பரிசை தொண்டான் துளசி காலபைரவர் மாடு பெற்றது. மூன்றாவது பரிசை லத்தேரி என்.டி.ஆர். மாடு பெற்றது. இதுபோல் 5 சிறப்பு பரிசுகள் உள்பட மொத்தம் 63 பரிசுகள் வழங்கப்பட்டன.
6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு 2 பேருக்கு பெருங்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பெற்றுச் சென்றனர். இதேபோல 4 மாடுகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுச் சென்றன.
விழாவில் கோட்டாட்சியர் தனஞ்செயன், தாசில்தார் சரண்யா, மண்டல துணை தாசில்தார் பலராமன் வருவாய் ஆய்வாளர் மணிமேகலை குடியாத்தம் போலீஸ்துணை சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும்
சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் குமாரசாமி பழனி தவமணி சங்கரன் அருண் காந்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் வருவாய்த் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்தனர்.
சுகாதாரத்துறையினர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மையத்தில் காயம் ஏற்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர் கால்நடை பராமரிப்புத் துறையினர் கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர் விழா ஏற்பாட்டினை விழாக்குழுவினர் ஊர் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்