நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் ? - மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.! திமுக அபாரம், அதிமுகவுக்கு சரிவு.! , பாஜகவுக்கு 3ம் இடம்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் என மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 43 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது, அதிமுக இரண்டாம் இடத்திலும் , பாஜக 3ம் இடத்திலும் உள்ளன, அதே நேரத்தில் அதிமுக, தேமுதிக, பாமக, நாதக, மநீம ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கி சரிந்து இருப்பது மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதன் மூலம் தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில் மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள், நகராட்சிகளில் 3,843 வார்டுகள், பேரூராட்சிகளில் 7,621 வார்டுகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள், 22ம் தேதி வெளியாகின.

இந்த தேர்தலில் மாநகராட்சியில் திமுக 952 வார்டுகளையும், அதிமுக 164 வார்டுகளையும், காங்கிரஸ் 73 வார்டுகளையும், பாஜ 22 வார்டுகளையும், சிபிஐ 13 வார்டுகளையும், சிபிஎம் 24 வார்டுகளையும், மதிமுக 21 வார்டுகளையும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 16 வார்டுகளையும், பாமக 5 வார்டுகளையும், அமமுக 3 வார்டுகளிலும் கைப்பற்றியுள்ளது.

“நகராட்சிகளில் திமுக 2,360  வார்டுகளையும், அதிமுக 638 வார்டுகளையும், காங்கிரஸ் 151 வார்டுகளையும், பாஜ 56 வார்டுகளையும், சிபிஐ 19 வார்டுகளையும், சிபிஎம் 41 வார்டுகளையும், மதிமுக 26 வார்டுகளையும்,  அமமுக 33 வார்டுகளையும், பாமக 48 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

பேரூராட்சிகளில் திமுக 4,389 வார்டுகளையும், அதிமுக 1,206 வார்டுகளையும், காங்கிரஸ் 368 வார்டுகளையும், பாஜ 230 வார்டுகளையும், சிபிஐ 26 வார்டுகளையும், சிபிஎம் 101 வார்டுகளையும், மதிமுக 34 வார்டுகளையும், விடுதலை சிறுத்தை கட்சி 52 வார்டுகளையும், அமமுக 66 வார்டுகளையும், பாமக 73 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில்  திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்ததுடன் வாக்கு சதவீதத்திலும் கடும் சரிவை சந்தித்துள்ளது.  தனித்து போட்டியிட்ட அமமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சியும் பல இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளன. 

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளில் வாக்கு சதவீதம் குறித்து  மாநில தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மாநகராட்சிகளில்  திமுக 43.59 சதவீதம், அதிமுக 24 சதவீதம், பாஜ 7.17 சதவீதம், காங்கிரஸ் 3.16 சதவீதம், நாம் தமிழர் கட்சி 2.51 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 1.82 சதவீதம், பாமக 1.42 சதவீதம், அமமுக 1.38 சதவீதம், தேமுதிக 0.95 சதவீதம், மதிமுக 0.90 சதவீதம்,   எஸ்டிபிஐ 0.85 சதவீதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி 0.72 சதவீதம்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.27 சதவீதம்,  வாக்குகள் கிடைத்துள்ளது.

நகராட்சிகளில்  திமுக 43.49 சதவீதம், அதிமுக 26.86 சதவீதம்,  பாஜ 3.31 சதவீதம், காங்கிரஸ் 3.04 சதவீதம், அமமுக 1.49 சதவீதம்,  தேமுதிக 0.67 சதவீதம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.64 சதவீதம், சிபிஐ 0.38 சதவீதம், மார்க்சிஸ்ட் 0.82 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 0.21 சதவீதம், மமக 0.11 சதவீதம், மதிமுக 0.69 சதவீதம், நாம் தமிழர் கட்சி 0.74 சதவீதம், பாமக 1.64 சதவீதம், எஸ்டிபிஐ 0.62 சதவீதம்  விடுதலை சிறுத்தைகள் கட்சி 0.62 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. 

பேரூராட்சிகளில் திமுக  41.91 சதவீதமும், அதிமுக 25.56 சதவீதமும், பாஜ 4.30 சதவீதமும்,

காங்கிரஸ் கட்சி 3.85, சதவீதம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3.85 சதவீதமும், அமமுக 1.35 சதவீதமும்,  மார்க்சிஸ்ட் கட்சி 1.34 சதவீதமும், சிபிஐ 0.44 சதவீதமும்,  தேமுதிக 0.55 சதவீதமும்,  மக்கள் நீதி மய்யம் 0.07 சதவீதமும், மமக 0.14 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 0.80 சதவீதம், பாமக 1.56 சதவீதம், எஸ்டிபிஐ 0.49 சதவீதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி 0.61 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது.

கடந்த 2011 தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு?

கடந்த 2011ல் 10 மாநகராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலில்  அதிமுக 71.34 சதவீதமும், திமுக 15.83 சதவீதமும், காங்கிரஸ் 2.07 சதவீதமும், மதிமுக 1.34 சதவீதமும், தேமுதிக 0.98 சதவீதமும், பாஜ 0.49 சதவீதமும், சிபிஐ 0.49 சதவீதமும், பாமக 0.24 சதவீதமும், சிபிஎம் 0.37 சதவீதமும் வாக்குகள் பெற்றன.

நகராட்சி தேர்தலில் அதிமுகவுக்கு 45.66 சதவீதம், திமுக 26.08 சதவீதம், காங்கிரஸ் 4.46 சதவீதம், தேமுதிக 3.22 சதவீதம், பாமக 1.62 சதவீதம், மதிமுக 1.33 சதவீதம், பாஜ 1 சதவீதம், சிபிஐ 0.54 சதவீதம், சிபிஐ 0.27 சதவீதம் வாக்குகள் கிடைத்தது.

பேரூராட்சியில் அதிமுக 35.28 சதவீதம், திமுக 22.09 சதவீதம், காங்கிரஸ் 4.65 சதவீதம், பாஜ 2.23 சதவீதம், தேமுதிக 4.76 சதவீதம், பாமக 1.31 சதவீதம், சிபிஎம் 1.24 சதவீதம், சிபிஐ 0.39 சதவீதம், மதிமுக 0.99 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post