நம்பியூர் அடுத்த காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மாள் இவர் தனது வீட்டு பின்புறம் ஆடுகளை கட்டி வைத்துள்ளார்.அதிகாலை அலறல் சத்தம் கேட்டு வெளியில் சென்று பார்த்த பொழுது 3 ஆடுகளையும் மர்மமான முறையில் விலங்குகள் போல கடித்து கொன்றுள்ளது தெரியவந்தது.
கடந்த இரண்டு நாட்கள் முன்பு இதே பகுதியில் 25 கோழிகளை கொன்றுள்ளது குறிப்பிடதக்கது.
தகவலறிந்து சம்பவ இடத்தில் டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.