கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... 2 கோடிக்கும் அதிகமாக சொத்து ஆவனங்கள் பறிமுதல்.!


விழுப்புரம், மண்டல கனிம வள இணை இயக்குனராக ஆறுமுக நயினார் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார்கள் எழுந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டை, விழுப்புரம், சென்னையில் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

விழுப்புரம் கிருஷ்ணா நகரில் ஆறுமுக நயினார் தங்கியுள்ள வாடகை இல்லத்தில், லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய் வரை சொத்துச் சேர்த்துள்ளதாக ஆறுமுக நயினார் மீது அம்மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

கனிமவள கொள்ளையில் அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் அடிக்கடி அடிபட்டு வரும் நிலையில், முக்கிய அதிகாரியின் வீட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் எதிர்பாராத பலரின் பெயர்கள் வெளிவரலாம் என கூறப்படுகிறது.

Previous Post Next Post