நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - கோவில்பட்டி நகராட்சியில் களம் இறங்கிய நடிகர் விஜய் மக்கள் இயக்கம் - 28வது வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் (பிப்) 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தொடங்கியுள்ளன. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கமும் போட்டியிட உள்ளது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஆலோசனையும் நடைபெற்றது.
இந்நிலையில் கோவில்பட்டியில் 28வது வார்டில் போட்டியிடுவதற்காக நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் கோவில்பட்டி நகர தலைவர் சுரேஷின் மனைவி சத்யா என்பவர் உதவி தேர்தல் அலுவலர் நாரயணணிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். தமிழகத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முதன் முறையாக சத்யா தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர தலைவர் சுரேஷ், பெருநகர செயலாளர் செண்பகராஜ் , அனைத்துமன்றகாப்பாளர் செல்வின்சுந்தர் , பொருளாளர் மாரிச்சாமி , துணைசெயலாளர் ரமேஷ் , அன்புநிதி , நகர இளைஞரணி தலைவர் மகேஷ்குமார் , மாரிச்செல்வம் நகர மாணவரனி தலைவர் பூக்கடை குட்டி , வர்த்தக அணி தலைவர் வேல்முருகன் , நகர இரத்த தான கழகம் தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்