அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் இவரது மனைவி சகாய செல்வி(25) இவர்களுக்கு விக்னேஷ் குமார்(4) என்ற மகனும் மௌனிகா(1) என்ற மகளும் உள்ளனர் தனது மனைவி குழந்தையுடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டு புதூர் பகுதியில் வசித்து வந்துள்ளார் ரமேஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் ரமேஷ், சகாய செல்வி ஆகிய இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக ரமேஷ் கிளம்பிக் கொண்டிருக்கும் போது சகாய் செல்வி தனக்கு வயிற்றுவலி இருப்பதாகவும் ஸ்ப்ரைட் வாங்கப் பணம் வேண்டும் என்றும் ரமேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் பணம் கொடுக்காமல் சென்று விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சகாய செல்வி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அறுபதடி ஆழம் கொண்ட கிணற்றில் தனது இரண்டு குழந்தைகளின வீசிவிட்டு அவரும் உள்ளே குதித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இறங்கி பார்த்தபோது படிக்கட்டில் படுகாயத்துடன் கிடந்த தாய் சகாய செல்வியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளின் உடலையும் சடலமாக மீட்பு தீயணைப்புத்துறையினர் உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய் இரண்டு குழந்தைகளை கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது