நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு பதிவு துவங்கியது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 750 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது. பதற்றத்தை தடுக்க 2620 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து பகுதிக்குட்பட்ட வாக்களர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
கோவில்பட்டி நகராட்சியில் 11மணி நிலவரப்படி 22.2% வாக்குகள் பதிவாகியுள்ளன
கழுகுமலை பேரூராட்சியில் 11மணி நிலவரப்படி 27% வாக்குகள் பதிவாகியுள்ளன
கயத்தார் பேரூராட்சியில் 11மணி நிலவரப்படி 37% வாக்குகள் பதிவாகியுள்ளன
விளாத்திகுளம் பேரூராட்சியில் 11 மணி நிலவரப்படி, 32.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதூர் பேரூராட்சியில் 11 மணி நிலவரப்படி, 38.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
எட்டையபுரம் பேரூராட்சியில் 11 மணி வரை, 30 % வாக்குகள் பதிவாகியுள்ளது.