நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாவட்ட எஸ்.பி, மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு.!*


நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நாளை முதல் வேட்பு மனு தாக்கல் செய்வதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் 


3 ஆய்வாளர்கள் தலைமையில் 45 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் நாளை முதல் வேட்பு மனு படிவங்கள் பெறுபவர்கள் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் மட்டுமே மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள், 

வேட்பு மனு தாக்கல் சம்மந்தமான அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 

15 துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 18 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன. 

அனைத்து வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தெரிவித்தார்.  

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார்,  மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் உட்பட காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Previous Post Next Post