குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: மோசமான வானிலையே காரணம்…விசாரணை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் Controlled Flight into Terrain (CIFT) காரணமாக , நிலப்பரப்பில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், ஜனவரியில் விமானப்படைத் தளபதியிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர்.

இருப்பினும், இதுவரை ஹெலிகாப்டர் விபத்து விசாரணை அறிக்கை குறித்து விமான படை சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த விபத்தானது மனித தவறுனாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ ஏற்படவில்லை. Controlled Flight into Terrain (CIFT) காரணமாக , நிலப்பரப்பில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CIFT என்பது ஹெலிகாப்டர் பறப்பதற்கு முழு தகுதியுடைய நிலையாகும். அதே சமயம், விமானியும் தவறு செய்யவில்லை. இதில், விபத்து நடந்த குன்னூர் பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வைத்திறன் குறைந்ததில் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. உலகளவில் விமான விபத்துக்களுக்கு CIFT முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.


இறுதி அறிக்கையின் மூலம் விபத்து குறித்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வரும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை மேற்கொண்டது. விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன், ஆய்வில் அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த, கண்டுபிடிப்புகள் சட்டப்பூர்வமாக சரிபார்க்கப்படும்.

விபத்து நடந்த உடனே ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மற்றும் “காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்” ஆகியவை கண்டு எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post