தூத்துக்குடி மாநகராட்சியில் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்த பட்டதாரி பெண்.!


தூத்துக்குடி மாநகராட்சி 28வது வார்டில் போட்டியிட இளம்பெண் ஒருவர் முதல்முதலாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது.  மாநகராட்சில் இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனு படிவங்களை பெற்றுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 

இந்நிலையில் இன்று  தூத்துக்குடி மாநகராட்சி  28வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட முகம்மது சாலிபுரத்தைச் சேர்ந்த முகம்மது பாபு மகள் தன்வீர் சமீனா (24) என்ற இளம்பெண் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

இவர் தூத்துக்குடி தனியார் மகளிர் கல்லூரியில் எம்.ஏ படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் தனது வேட்பு மனுவை உதவி தேர்தல் அலுவலர் ரங்கராஜனிடம் வேட்பு மனுவை அளித்தார். 

மனுவை தாக்கல் செய்த பின்னர் அவர் கூறுகையில், படிக்கின்ற காலத்தில் அதிக அளவில் எங்களது பொதுமக்களுக்கு சேவை செய்துள்ளேன். தற்போது நான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக செயல்பட்டு பொது மக்களுக்காக உறுதுணையாக இருப்பேன் எனது தந்தை அறிவுறுத்தலின்படி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.என்று கூறினார்.

Previous Post Next Post