ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள புது காலனி இயேசு நமக்காக தேவசபையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி தலைமையில்
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன், கலந்து கொண்டு கைம் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு புத்தாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், வடக்கு நகர செயலாளர் பழனி முருகன், 9வார்டு கிளை செயலாளர் அண்ணாமலை சாமி, நகர மருத்துவர் அணி ஜான் பால், கிளை செயலாளர் தங்கராஜ், ஒன்றிய துணை செயலாளர் சேகர்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் பூமிபாலகன், ஒன்றிய அவைத்தலைவர் பால்சாமி, லிங்கம்பட்டி ஒன்றிய கிளை பொருளாளர் பிச்சை, கிளை துணைச்செயலாளர் ஒன்றிய வர்த்தகர் அணி செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் தங்கமுத்து,
கடலையூர் ஊராட்சி கழகச் செயலாளர் முத்து கிருஷ்ணன், கடலையூர் கிளை பொருளாளர் பன்னீர், விவசாய அணி செயலாளர் சூசை, ஒன்றிய தொண்டரணி சுதாகர், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.