சென்னிமலை எக்கட்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள கல்குவாரிகள் நேரடியாக உண்மை அறியும் குழுவால்- கள ஆய்வு


ஈரோடு மாவட்டம் - பெருந்துறை வட்டம் - சென்னிமலை ஒன்றியம் - எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள 9 கல் குவாரிகள் தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்குவதாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மற்றும் பல்வேறு ஆதாரங்களுடன் தொடர்ந்து ஊர் மக்கள் புகார் அளித்து வந்தனர்.

எனவே 9 கல் குவாரிகளும், பெரியநாயகி அம்மன் எம்சாண்ட் தொழிற்சாலை (1), பானு கோபால் கிரஷர்(1) ஆகியவை என்னென்ன சட்டவிதிகளை மீறி உள்ளனர் என்பதை நேரடியாக பார்த்து, கள ஆய்வு செய்தனர். எக்கட்டாம்பாளையம் ஊர்மக்களின் அழைப்பின் பேரில் கள ஆய்வுக்கு வருகை தந்த உண்மையறியும் குழுவில்,  

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர். ஈசன், கனிம வள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர முகிலன், அமராவதி ஆற்றில்  மணல் கொள்ளையை சட்டப் போராட்டம் மற்றும் மக்களை திரட்டியும் போராடி தடுத்து நிறுத்திய சாமானிய மக்கள் கட்சி நிறுவனர் முனைவர் ப. குணசேகரன்,  திண்டுக்கல் காளிப்பட்டி குளம் உட்பட பல்வேறு குளங்களின் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்திய நேர்மை மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பழ. ரகுபதி, 

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சு. விஜயன், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.சண்முகம்,  லா பவுண்டேசன் வாசுதேவன், பனியம்பள்ளி ஊராட்சித் தலைவர் சிவக்குமார்,  சென்னிமலை பூப்பறிக்கும்  மலை முறைகேட்டுக்கு 8 கோடி ரூபாய் அபராதம் போட வைத்த ஈங்கூர்.

 நந்தகுமார்,  தொடர்ந்து சூழலியல் அக்கறையோடு செயல்பட்டு வரும்  சமூக ஆர்வலர்கள் பாரதி, நல்லசிவம் உள்ளிட்டோர்  ஆகியோருடன் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்களும் உடன் பங்கேற்றனர். இவ்வாய்வானது காலை 7 மணி முதல் தொடங்கி 11:30 மணி வரை நடைபெற்றது. இக்கள ஆய்வினை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக அறிவித்தனர்.

Previous Post Next Post