கருவுற்ற மகளிருக்கு பணி நியமனம் மறுக்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது பாரத ஸ்டேட் வங்கி
3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்களை புதிதாக பணிக்கு சேர்க்க வேண்டாம் என்ற உத்தரவை எஸ்.பி.ஐ. வங்கி திரும்பப் பெற்றது.
பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி, 3 மாதத்திற்கு மேல் கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை புதிதாக வேலைக்கு சேர்க்க வேண்டாம் என கூறியதோடு, அவர்கள் தற்காலிகமாக தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் எனவும், வேலையில் சேருவதற்கான அனைத்து தகுதிகளையும் அவர்கள் பெற்றிருந்தாலும், குழந்தை பிறந்து 4 மாதத்திற்கு பிறகே வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது.
இதற்கு மகளிர் ஆணையம் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கொரோனா காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ள எஸ்.பி.ஐ., கர்ப்பிணிகளை பணியில் அமர்த்துவதில் ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும் எனக் கூறியுள்ளது.
இதற்கு முன்பு 6 மாதம் வரையிலான கர்ப்பிணி பெண்கள், சம்பந்தப்பட்ட மருத்துவரின் சான்றிதழை சமர்ப்பித்தால் பணியில் அமர்த்தலாம் என்ற நடைமுறை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
#SBI #GenderEquality #Women