தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதி மொழி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் 2 நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம், காவல் ஆய்வாளர்கள் மாவட்ட குற்ற ஆவணக்கூடம் ஜெரால்டின் வினு, மாவட்ட குற்றப் பிரிவு வனிதா ராணி, நிர்வாக அதிகாரிகள் சிவஞானமூர்த்தி, சுப்பையா, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, மயில்குமார், கணேசபெருமாள், மாரியப்பன், சுப்பிரமணியன், நம்பிராஜன், காவேரி, சரஸ்வதி உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post