நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த தன்னை திமுக., வினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/airwindraj/status/1488068599776382976?t=aC1xz4dBmvBF0HPXTPL1-Q&s=19
கரூர் மாவட்ட திமுக., அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பி, அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுகுறித்து கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுக.,வினர் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தன்னை வெளியேற சொல்வது தான் திமுகவின் கூட்டணி தர்மமா? இது தான் திமுக., வில் பெண்களுக்கு தரும் மரியாதையா? என, ஆவேசமாக குரல் எழுப்பினார்.