தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் : ஆட்சியர் செந்தில் ராஜ் தகவல்!


தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  தெரிவித்துள்ளளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :- 

2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2022 முதல் 1 கிலோ - பச்சரிசி, 1 கிலோ - வெல்லம், 50 கிராம் - முந்திரி, 50 கிராம் - திராட்சை, 10 கிராம் - ஏலக்காய், 500 கிராம் - பாசிபருப்பு, 100 கிராம் - நெய், 100 கிராம் - மஞ்சள்தூள், 100 கிராம் - மிளகாய் தூள், 100 கிராம் - மல்லித்தூள், 100 கிராம் - கடுகு, 100 கிராம் - சீரகம், 50 கிராம் - மிளகு, 200 கிராம் - புளி, 250 கிராம் - கடலைபருப்பு, 500 கிராம் - உளுத்தம்பருப்பு, 1கிலோ - ரவை, 1 கிலோ - கோதுமை மாவு, 500 கிராம் - உப்பு, ஒரு துணிப்பை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2022 பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் நியாய விலைக் கடைக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.  

மேலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி சீராக நடைபெறுவதை கண்காணித்திட, வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாகவும், நடமாடும் கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த புகார்கள்/குறைகள் ஏதுமிருப்பின் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண். 0461-2341471-ல் புகார் அளிக்கலாம் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post