ஆண்டிபட்டி , ஜனவரி- 2
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலகோம்பை ஓடைப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய இரண்டு டிராக்டர்களை இராஜதானி சார்பு ஆய்வாளர், தலைமையிலான போலீசார் பிடித்து காவல் நிலையம் கொண்டு செல்ல இருந்த நிலையில்.
பாலகோம்பையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் டிராக்டரை போலீசார் எடுத்து செல்ல விடாமல் வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் பகுதியில் மணல் அள்ளி கிராமத்திலுள்ள தேவைகளுக்காகத்தான் மணல் பயன்படுத்தப்படுவதாக போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், மற்றும் வருவாய் துறையினர் உரிய அனுமதியின்றி மணல் எடுப்பது குற்றம் என்றும் உடனடியாக கலைந்து செல்லுமாறும் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில்,
தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் செய்ததால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிறிய தடியடி நடத்தி விரட்டினர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிராக்டர்களை காவல்நிலையம் கொண்டு சென்ற போலீசார் மணல்திருட்டில் ஈடுபட்டு தப்பியோடிய டிராக்டர் டிரைவர்கள், மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யவுள்ளனர்.