தை அமாவாசை - கடற்கரை பகுதிகளில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.!


தூத்துக்குடியில் தை அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான கடற்கரைகளில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆண்டுதோறும் தை அமாவசை நாளில் கடற்கரையோரங்கள், ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும்  அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும் நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.


அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்கரை, ஆற்றங்கரை  பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும்  அதிக அளவில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்து வருகின்றனர். இதனை முன்னிட்டு 6 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரை பகுதிக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.  இந்நிகழ்வின்போது மத்தியபாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிச்சைபாண்டியன், தெர்மல் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சரவணன், லதா, லூர்து சேவியர் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post Next Post