தூத்துக்குடியின் முன்னாள் நகர் மன்ற தலைவரான ஹென்றி தாமஸ், டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.
இந்நிலையில், அமமுகவில் ஹென்றி தாமசுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், அதிருப்தியில் இருந்த ஹென்றி தாமஸ், அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனையும்,
வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ., வையும் சந்திந்துள்ளதாகவும், மீண்டும் அவர் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று அவர் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
இவர் ஏற்கனவே அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர், தூத்துக்குடி நகராட்சி மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மேயரும் அந்தோணி கிரேசியும் அதிமுகவில் இணைந்தார். இவர் அமமுக தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.