திருப்பூர் மாநகர, வடக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ரயில்நிலையம் புஷ்பா சந்திப்பில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளும் போது அவ்வழியாக சுமார் 16 கிலோ அளவுள்ள கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த கணக்கம்பாளையம், குமரன் காலனி, கார்த்திக் (வயது 31) திருப்பூர் என்ற நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி கார்த்திக் ( என்ற நபர் கஞ்சா விற்பனை செய்வதால் கஞ்சா உபயோகிப்போரின் வாழ்க்கை சீரழிவதுடன், குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இளைஞர் சமுதாயம் மற்றும் கூலி தொழிலாளர்களின் வாழ்க்கை சீரழிவதுடன் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலலும் போதை மருந்து மனநிலைப் பாதிப்பு சட்டத்திற்கு எதிராகவும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வே.வனிதா, ஆணையிட்டுள்ளார்.
கோயமுத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்திக் என்ற நபரை ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணை வழங்கப்பட்டது.