கடந்த 09.01.2022 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நட்டாத்தி மீனாட்சிபட்டி செல்லும் சாலையில் நாகபத்ரம் (65), த/பெ. அய்யப்பன், உடையடியூர், பெருங்குளம் என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில்
தங்கராஜா (எ) தங்கம் (21), த/பெ. பேச்சிமுத்து, கொம்புக்காரன்பொட்டல் என்பவரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
மேற்படி வழக்கின் எதிரியான தங்கராஜா (எ) தங்கம் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரிஜெமிதா அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ், தங்கராஜா (எ) தங்கம், த/பெ. பேச்சிமுத்து, கொம்புக்காரன்பொட்டல்என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரிஜெமிதா எதிரி தங்கராஜா (எ) தங்கம் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.