மூன்றில் ஒருவரை உயிரிழக்கச் செய்யுமாம் புதுவகை ‘நியோகோவ்’ வைரஸ்!

கொரோனா வைரஸ் வந்ததும் வந்தது, எல்லோரையும் எந்த நேரமும் பதட்டத்திலேயே வைத்திருக்கிறது. 2020 ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்த கொரோனாவிலுருந்து இன்னமும்  நாம் மீளவில்லை. டெல்டா வைரஸ் பரவலின் போது, வீதிக்கு சிலரை இழந்தோம், நோய் பாதிப்பு, பொருளாதார பாதிப்பு என சொல்லி மாளாத கவலைகள் அனுபவித்தோம். 

இப்போது மூன்றாவது அலை கொரோனாவான ஒமிக்ரானை கடந்து கொண்டு இருக்கிறோம். அதுவும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் ஒருவரை கூட விடாமல் சளி, காய்ச்சல், இருமல் என்று படுத்தி எடுத்துக் கொண்டு சென்றது. ஆனாலும் நல்ல விஷயமாக இதில் பெரிய அளவிலான  இறப்புகள் இல்லை. 

ஒமிக்ரான் கொரோனாவை முடிவுக்கு கொண்டு  வரும், கொரோனா இந்த உலகத்தை விட்டு சென்று விடும் என்றெல்லாம் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பரவியது. அதில் கொஞ்சம் ஆறுதலடைந்து இருக்கிறோம். 

இந்த நேரத்தில் பாருங்க., சீனாவிலிருந்து இன்னொரு அதிர்ச்சி தகவல் பேரிடியாக வந்திருக்கிறது. ‘நியோகோவ்’ என்கிற புதிய வகை கொரோனாவை கண்டு பிடித்து இருக்கிறார்களாம். அந்த கொரோனா வெகு வேகமாக பரவும் என்கிறார்கள். அதிலும் வைரஸ் பரவிய 3 பேரில் ஒருவரை இறக்கச் செய்யும் அளவுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்தும் என்கிறார்கள். 

இந்த ‘நியோகோவ்’ என்கிற கொரோனா தற்போது பயனில் இருக்கும் தடுப்பு மருந்தால் உருவான ஆண்டிபாடிகளுக்கு கட்டுப்படாது எனவும் கூறுகிறார்கள். வவ்வால்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் இன்னும் ஒரு மாறுபாடு அடைந்தால் மனிதனுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது என்றும் அது மிகவும் அபாயகரமானது என்றும் சொல்கிறார்கள்.

அந்த வைரசை அப்படியே அழிக்க ஏதாவது மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடித்தார்களானால் அதுவே இந்த மனித இனத்துக்கு நல்லதாக இருக்கும்.  


Previous Post Next Post