அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜிஎஸ்டி கவுன்சிலின் 46வது கூட்டம், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பரிந்துரைக்கப்பட்ட ஜவுளி / ஆடைகளின் ஜிஎஸ்டி வரி விகிதங்களை உயர்த்தும் முடிவை ஒத்திவைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இதன் விளைவாக, ஜவுளித் துறையில் தற்போதுள்ள ஜிஎஸ்டி விகிதங்களே ஜனவரி 2022க்குப் பிறகும் தொடரும் என்ற முடிவு மிகவும் வரவேற்கதக்கதாகும்.
ரூபாய் 1000க்கும் கீழ் உள்ள ஆயத்த ஆடைகளுக்கு 5சதவீத ஜிஎஸ்டி வரிவிகிதமே தொடரும் என்ற அறிவிப்பு உள்ளபடியே ஆடைகளின் விலைஉயர்வை கட்டுப்படுத்தி, ஆடை வர்த்தகம் பெருக வழிவகை செய்யும்.
இதனால் மக்களும் பெரிதும் பயனடைவர்.
இந்த அறிவிப்பினை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எங்களது நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். என்றார்.