சாட்டை துரைமுருகன் கடந்த 19ஆம் தேதி சைபர் குற்றபிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ‘சாட்டை’ துரைமுருகன் சில வாரங்களுக்கு முன்னதாக ஜாமினில் வெளியே வந்தார். தனது ‘சாட்டை’ யூடியூப் தளத்தில் அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 9 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக பேசியிருந்தார். இந்த வீடியோதான் பாஸ்கான் ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைவதற்கு காரணம், பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டினார் என கூறி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வரும்
அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை போடுவது குறித்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் நாளை அவருடைய ஜாமீன் விசாரணைக்கு வரும் நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிவருவதாலும் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திருவள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.