புஞ்சைபுளியம்பட்டி, மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள், கோவிட்- 19 வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து கட்சிக் கூட்டம்.
எதிர்வரும் 19ம் தேதி நடத்தவுள்ள நகர்பற உள்ளாட்சி களுக்கான தேர்தல் நடத்தை விதிகள்குறித்தும் .கோவிட் - 19 வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில், நகராட்சி ஆணையர் சக்திவேல் தலைமையிலும், சத்தியமங்கலம் நகராட்சியில் நகராட்சி பொறியாளர் சிவக்குமார் தலைமையிலும் நடைபெற்றது.
மேற்படி கூட்டங்களில், புஞ்சை புளியம்பட்டியில் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி, மற்றும் இரண்டு நகராட்சிகளில் நகராட்சிமேலாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், தேர்தல் பணி அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகி களும் கலந்து கொண்டு ஆலோசனைகளையும், கருத்துக் களையும் கேட்டு அறிந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால், தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்கவும்,
வேட்புமனு தாக்கலின் போது கடைபிடிக்கக் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாக்கு சேகரிப்பின்போது அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடத்தை விதிகள் ஆகியன குறித்து எடுத்துக் கூறியும், அறிவுரையும் வழங்கப்பட்டது. மேலும் நகராட்சி பகுதிகளில் உள்ள
அனைத்து பொதுமக்களும் இரண்டாம் கட்ட கோவிட்- தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களை வலியுறுத்துமாறு அரசியல் கட்சியினரை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். நிறைவாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும், கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கையேடு அரசியல் கட்சியினருக்கு நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது..
நாராயணசாமி செய்தியாளர் சத்தியமங்கலம்