இராமேஸ்வரம் பிப் 01
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம் இந்நிலையில் கடந்த ஆடி மற்றும் மகாளய அமாவாசைகளில் குரோனா தொற்று காரணமாக பக்தர்களை அனுமதிக்காததால் இந்த தை அமாவாசையில்
அனைத்து பக்தர்களும் மொத்தமாக ராமேஸ்வரத்தில் குவிந்தனர் தன்னோடு வாழ்ந்து முடித்த முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்
இதனால் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவில் நிர்வாகம் சார்பில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வழிகாட்டுதல் முறைகளை கடைபிடித்து அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர் இதில் 645 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்