ஜனவரி 29
கோவை மாவட்டத்தில் பெருகிவரும் கொரோனா பரவலைத் தடுப்பதுபற்றியும், அதிலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது பற்றியும், திரைப்பட இயக்குனர் சூலூர் சுரேஷ்குமார் எழுதி இயக்கிய விதிமுறை என்ற சமூக விழிப்புணர்வு குறும்படத்தை
கோவை கமிஷனர் அலுவலகத்தில் துணை ஆணையர் உமா ஐபிஎஸ் மற்றும் துணை ஆணையர் தலைமை இடம் செல்வராஜ் ஐபிஎஸ்இணைந்து வெளியிட்டு இயக்குனரை மேலும் இதுபோன்ற நல்ல படங்களை சமூகத்திற்கு வழங்குமாறு வாழ்த்தினர்
இந்தக் குறும்படத்தை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் சாட்டிலைட் ஸ்ரீ விநாயகா கிரியேஷன்ஸ் தயாரித்தனர்
இந்த நிகழ்ச்சியில் நிகழ்வில் திரைப்பட இயக்குனர் சுரேஷ்குமார்,ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் டாக்டர்சிவப்பிரகாஷ், செகரட்டரி யுவராஜ் சிங்காரவேலு உடனிருந்தனர்
இப்படத்தைப் பற்றி இயக்குனரிம் நம் நாளிதழ் சார்பில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது
இதற்கு முன் இதைப்போன்ற சமூக விழிப்புணர்வு படங்களை நீங்கள் வெளியுட்டதுண்டா
முப்பத்தைந்து படங்களுக்கு மேல் வெளியிட்டதோடு பல மாவட்ட மாநில விருதுகளையும் வாங்கியிருக்கிறேன் குறும்படம் தாண்டி வெள்ளித்திரையில் தடம் பதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா
இருக்கிறதாவா, ஆல்ரெடி அகடு என்ற திரைப்படம் வெற்றிகரமாக ஓடியதைத்தாண்டி, தற்போது அடுத்த திரைப்படத்திற்கானவேலைகள் நடந்து கொண்டிருக்கிறது
அது எதை நோக்கிய படம் அதுவும் சமூக விழிப்புணர்வைச் சார்ந்ததே ஏன் உங்களுக்கு வேறுபடங்கள் இயக்க வராதா அப்படி என்ன சமூகத்தின் மேல் உங்களுக்கு அக்கறை எல்லோரும் ஒரே திசையில் பயணம் செய்யும் என் திரைப்பயணம் வேறாக மட்டுமல்ல, சமூகத்திற்கு வேராக வேண்டுமே என்பதற்காக உங்களால் இந்த சமூகம் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறதா
அந்தக் கேள்விகளைத் தங்களுக்குள் மகாத்மா காந்தி கேட்டிருந்தால், நெல்சன் மண்டேலா கேட்டிருந்தால், ஆபிரகாம் லிங்கன் கேட்டிருந்தால், லெனின் கேட்டிருந்தால், சேகுவாரே கேட்டிருந்தால், மார்க்ஸ் ஏங்கல்ஸ் கேட்டிருந்தால் இந்த சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்திருக்காதே
எனது இலட்சியமே பள்ளி, கல்லூரி மற்றும் கிராம மக்கள் இதைப் போன்ற விழிப்புணர்வுகளைக் கையிலெடுத்தால் மாற்றம் தொலைவில் இல்லை மிக அருகில் என்பதே என்ன சொல்ல வருகிறீர்கள் விதிமுறை குறும்படம் மூலம்
நமது அரசு மற்றும் அரசு அதிகாரிகள் ஒரு விழிப்புணர்வை நம்மிடையே கொண்டு வரும்போது அதைப்புறந்தள்ளாமல், அஜாக்கிரதையில்லாமல், நமக்கு என்ன வரப்போகிறதென்ற மெத்தனமில்லாமலும் முழு அளவில் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாலே, எல்லாமே சரியாகிவிடும் என்பதை ஆழமாக பதித்திருக்கிறேன் என்றார்
இந்த இளம் இயக்குனர் இதுபோன்ற எண்ணற்ற விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் இயக்கி மாநில மத்திய விருதுகளை வாங்க நமது நாளிதழ் மனதார வாழ்த்துகிறது