சத்தியமங்கலம் வழியாக கோவைக்கு காய்கறி வண்டியில், சட்டவிரோதமாக, தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா கடத்தியவர்கள் கைது - வாகனம் பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூலிருந்து கோவைக்கு காலிபிளவர் ஏற்றிய இரண்டு வாகனங்களில், அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ், குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வருவதாக சத்தியமங்கலம் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் நெப்போலியன் தலைமையிலான போலீசார்
பண்ணாரி சோதனை சாவடியில் இரவில் வாகன சோதனை செய்தபோது, காலிபிளவர் ஏற்றி வேகமாக வந்த இரண்டு பிக் அப் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது,காலிபிளவர் காய்கறிக்குள் மூட்டை மூட்டையாக, குட்கா பொருள்கள் கடத்தி வருவது கண்டறியப்பட்டது,
வாகனத்தை கைப்பற்றிய போலீசார் காவல் நிலையத்தில் வைத்து, வாகன ஓட்டுநர்களிடம் விசாரித்தபோது, மைசூர் சிக்கரன்கள்ளியைச் சேர்ந்த கரியப்பா என்பவரின் மகன்பிரசன்னா வயது (30) என்ற வாகனத்தின் உரிமையாளரும்,மைசூர் H D கோட்டையைச் சேர்ந்த சிவனாச்சாரி மகன் சுதாகர் என்கிற சுதி வயது 30 மேற்படி இருவரும்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து காலிபிளவர் காய்கறி வாகனத்தில் ஹான்ஸ், குட்கா கடத்திக் கொண்டு கோவை நோக்கி செல்வதாக தெரிவித்தனர். இவர்கள் கடத்தி வந்த குட்கா, பான், ஹான்ஸ், பிரான்ஸ் ஆகியவற்றின் எடை சுமார் 2.25 டன் (2250 கிலோ) அதன் மதிப்பு சுமார் 15 இலட்சம் பெருமானம் பெறும் எனவும், சத்தியமங்கலம் போலீசார் இருவரையும் கைது செய்து, இரண்டு பிக்-அப் வாகனங்களை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
நாராயணசாமி.
செய்தியாளர்.