புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம்.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து அசோக் நகர் காட்டு நாயக்கன் தெருவில் உள்ள ஸ்ரீகாளியம்மன், மாரியம்மன் திருக்கோவிலில் பத்தாம் ஆண்டு அன்னதானம் மற்றும் 14 ஆம் ஆண்டு படி பூஜை விழாவில் புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ  சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.


அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் பின்னர் காட்டு நாயக்கன் தெரு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.


நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் விஜய் பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார், 

அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமான், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ் முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி ,கழகப் பேச்சாளர் பெருமாள், சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


பின்னர் கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சண்முகநாதன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு புத்தாண்டு தினத்தையொட்டி வாழ்த்துக்கள் கூறி சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Previous Post Next Post