தூத்துக்குடி வழக்கறிஞர் தேர்தல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட குழு தேர்தலை நடத்தியது.
இதில் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர்கள் ஜோசப் செங்குட்டுவன், செல்வக்குமார், பொன்ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். துணைத்தலைவர் பதவிக்கு வழக்கறிஞர்கள் செல்வின், வேல்முருகன்,மங்கள்ராஜ்,மேரி,முத்துலெட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர்.
செயலாளர் பதவிக்கு வழக்கறிஞர்கள் மார்க்ஸ், சரவணன்,ராஜாராம் ஆகியோர் போட்டியிட்டனர். இது தவிர செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர்
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. வழக்கறிஞர் கிருஷ்ணவேணி தலைமையிலான குழுவினர் மேற்பார்வையில் வழக்கறிஞர்கள் பிள்ளைவிநாயகம், சந்தணகுமார் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட்டன. இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவராக ஜோசப் செங்குட்டுவன் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் துணைத் தலைவராக செல்வின், செயலாளராக மார்க்ஸ், துணைச் செயலாளராக ரமேஷ், பொருளாளராக ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், சண்முக சுந்தர ராஜ், மணிகண்ட ராஜா, ஸ்டீபன் தாஸ், சோம சுந்தர், முனீஸ் குமார், தி சுவாமிநாதன், மகளிர் அணி கீதா, ஜஸ்டினா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தூத்துக்குடியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுத் துறை சார்ந்தவர்கள் அரசு அதிகாரிகள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.