முன்கள பணியாளர்களுக்கு பாரத பிரதமர் கையெழுத்திட்ட சான்றிதழ்கள்: பா. ஜ.க.,சார்பில் வழங்கப்பட்டது

 திருப்பூர், வடக்கு மாவட்ட பாஜகவின் மருத்துவ அணி சார்பில் இன்று ஏராளமான முன்கள பணியாளர்களுக்கு பாரத பிரதமர் கையெழுத்திட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .

திருப்பூர், வடக்கு மாவட்ட பாஜகவின் மருத்துவ அணி சார்பில் முன்கள பணியாளர்களுக்கு சான்றிதழ் வழக்கும் நிகழ்வு திருமுருகன்பூண்டி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இத்தகைய நிகழ்விற்கு, பாஜக கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். 

மருத்துவ அணி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மேலும், சிறப்பு விருந்தினராக மாநில மருத்துவ அணி தலைவர் விஜய பாண்டியன் கலந்து கொண்டு கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரை கூட பொருட்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாரத பிரதமர் மோடி கையெழுத்திட்ட சான்றிதழ்கள் வழங்கினார். 

மேலும், மாநில மருத்துவ அணி தலைவர் விஜய பாண்டியன் பேசியதாவது: முன் களப்பணியாளர்கள் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதை கௌரவிக்கும் விதமாக பாரத பிரதமர் மோடி கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்க கூறியுள்ளார். இத்தகைய மனசு வேறு எந்த பிரதமருக்கும் வராது. சாதி, மதம் மற்றும் கட்சி என எதையும் பாராமல் நடுநிலையுடன் செயல்பட்டு வரும் ஒரே பிரதமர் மோடி எனக்கூறினார்.

இந்த நிகழ்வில் கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த முன் களப்பணியாளர்கள் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுக்கொண்டனர்.

Previous Post Next Post