கோவையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
கோவையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வரும் அரசு பேருந்தில் ஒன்றில் விற்பனை செய்வதற்காக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையெடுத்து இன்று அதிகாலையில் போலீசார் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவையில் இருந்த வந்த அரசு பஸ் இருந்தில் இறங்கிய சந்கேத்திற்கிடமான வகையில் நின்று கொண்டு இருந்த இளைஞர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த இளைஞரை நாலாட்டின்புதூர் ரெயில்வே பீடர் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் இசக்கிமுத்து(23) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இதையெடுத்து போலீசார் அவரை கைது செய்தது மட்டுமின்றி அவரிடம் சுமார் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி உதவி ஆய்வாளர்
அரிகண்ணன் வழக்கு பதிவு செய்து எங்கிருந்து கஞ்சா வாங்கி வரப்படுகிறது. இதில் வேறு யாரூக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்து இசக்கிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.