சொத்து மதிப்பு சான்று வழங்க 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காங்கேயம் வட்டாட்சியர் சிவகாமி கைது.
காங்கேயம் பகுதியை சேர்ந்த நபர் தனது 75 லட்ச ரூபாய்க்கான சொத்துமதிப்பு சான்றிதழ் வழங்க வேண்டி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்
இந்த சான்றிதழை வழங்க 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என வட்டாட்சியர் சிவகாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு தொகை கொடுக்க முடியாது என விண்ணப்பதாரர் தெரிவித்ததால் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சான்றிதழ் தருகிறேன் என வட்டாட்சியர் சிவகாமி கராராக பேசி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விண்ணப்பதாரரிடம் வழங்கினர். அந்த நோட்டுகளை வட்டாட்சியரிடம் விண்ணப்பதாரர் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சிவகாமியை கையும் களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்திற்க்கும் மேலாக வட்டாட்சியர் சிவகாமியின் துறுவி துறுவி விசாரணை நடத்தினர்.
புகார் உறுதியானதை தொடர்ந்து வட்டாச்சியர் சிவகாமியை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.